ஹைக்கூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன சென்ரியு கவிதைகள்?இது ஒரு நவீன ஹைக்கூ
ஹைக்கூவில் மானுடம் பற்றி ஏதேனும் குறிப்பிருந்தால் அதை சென்ரியு என்று சொல்கிறார்கள்.இதன் இலக்கணம் என்ன தெரியுமா?ஆழமற்றது;வேடிக்கையானது.விடுகதை போன்றது.நகைச்சுவையானது;பொன்மொழி போன்றது.இவ்வகைக் கவிதைகளைத் திரட்டியவர் பெயர் காராய்ஹச்சிமோன் சென்ரியு
இவர் கி.பி 18நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார் அவரின் புனைப்பெயர் சென்ரியு அவரின் புனைப்பெயரிலையே இக்கவிதை அழைக்கப்படுகிறது
ஹைக்கூவுக்கான இலக்கணமும் கவித்துவமும் இல்லாமால் நகைச்சுவை உணர்வு மேலோங்கி ஒரு விசயத்தை கிண்டலாக சொல்லும் விசயமே சென்ரியுவாகும் நம்ம நண்பர்கள் சொல்வார்களே,,,,,,, நீ மனுசனே இல்லடான்னு நிறுத்தி பிறகு தெய்வம் என்பார்களே அதுப்போலதான்,,,,
தமிழில் சென்ரியு வகைக் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதி ''ஒரு வண்டி சென்ரியு''என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதிலிருந்து நான் ரசித்த சில கவிதைகள்:
''தொகுதிதான்
முடிவாகவில்லை.
தோல்வி முடிவாகிவிட்டது.''
*****
''ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்.''
******
''சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்.''
******
''குடித்தவன்
குடலுக்குள்ளும்
மயங்கவில்லை மது.''
******
''சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.''
******
என் சென்ரியு கவிதைகள்
இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை,,,!
ஏழையின் கூந்தலுக்கு
எண்ணெய் இல்லை
அம்மனுக்கு நெய் அபிஷேகம்
சரஸ்வதி குடியிருக்க
வாடகை எவ்வளவு
நாக்கில்,,,!
முழு அடைப்பு
காவல்துறை இயங்கியது
பேருந்துக்கு பாதுக்காப்பளிக்க,,,!
~நாகை ஆசைத்தம்பி
மிக அருமை நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அய்யா
Deleteவணக்கம் பல,,,
மிக அருமை நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஆயிரம் பேரோடு
ReplyDeleteவேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்
இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை,,,!............சிறப்பான சென்றியுக்கள் .... வாழ்த்துகள்
மிக்க நன்றி அய்யா
Deleteவணக்கம் பல,,,