Thursday, September 10, 2020

நல்ல ஹைக்கூவை புரிந்துக்கொள்ள எளிய வழி

 100ஆண்டுகளை கடந்து பயணிக்கிறது ஹைக்கூ கவிதைகள் ஒருசிலர் அது ஜப்பானிய வடிவம் என சொன்னாலும் கவிஞர்கள் அவரவர் மொழியில் நமது பண்பாடு கலாச்சாரம் இவைகளை முன்னெடுத்து எழுதிவருவது சிறப்பாக இருக்கிறது ஆனால் ஒருசிலர் மூன்று வரிகள் இருந்தாலே அது ஹைக்கூதான் என்று புரிதல் இல்லாமல் எழுதுவதும் வருத்தமளிக்கிறது 5-7-5என்ற பார்மலாவை நாம் கடந்துவிட்டோம் என்றாலும் சிலர் குறுங்கவிதைப்போல எழுதி இடையிடையே மூன்று கோடுகளைப்போட்டு இதுவும் ஹைக்கூ என்பதோடு அதை எடுத்துச்சொல்லும் கவிஞர்களிடமும் சண்டைப்போடுவதுமுண்டு என்னுடைய நோக்கம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதுதான் அந்த வகையில் ஹைக்கூ கவிதையிலும் அழகியலை மட்டும் சொல்லாமல் மக்களுக்கான கருத்தியல்களையும் விதைக்கலாம் 


ஒரு நல்ல ஹைக்கூவை மிக எளிமையாக எழுதுபவர்களே அடையாளம் காணலாம் நாம் எழுதிய ஹைக்கூவை கீழிருந்து மேலாக ஒருமுறை வாசித்துப்பாருங்கள் அப்போதும் நீங்கள் எழுதியப்படியே பொருள் தந்தால் அதுதான் நல்ல ஹைக்கூ என எனது ஆய்வில் உணர்ந்துள்ளேன் இனி ஹைக்கூ கவிஞர்கள் இந்த வழியை பின்பற்றலாமே,,,உதாரணமாக சில ஹைக்கூ கவிதைகளை கொடுத்துள்ளேன் அதையும் பாருங்கள் அந்த ஹைக்கூ கவிதைகளை மேலிருந்தும் கீழிருந்தும் வாசியுங்கள் பொருளும் மாறாது கவிதையும் மாறாது இப்படியான ஹைக்கூ கவிதைகளே நல்ல ஹைக்கூ என்பதை கவிஞர்களின் நலனுக்காக சொல்கிறேன்


மணவரை

மெதுவாய் பெருக்குகிறாள்

முதிர் கன்னி

               ~ அறிவுமதி


தொடர்ந்து நடக்கிறேன்

பாதை உருவாகிறது

பலர் நடக்கிறார்கள்

                    ~அமுதபாரதி


கறுத்த பெண்

புகுந்தகம் வந்தாள்

கலர் டீவி யோடு

                      ~ மு.முருகேஷ்


பொம்மை விற்பவனிடம்

தாராளமாய் உள்ளது

குழந்தை பாசம்

                    ~கா.ந.கல்யாணசுந்தரம்


கல்லறையில் மழை

புரண்டு படுக்கிறது

உதிர்ந்த சருகு

               ~ தக்ஷன்


பாசத்தையும் ஒப்படைத்து

வெறுங்கையுடன் திரும்புகிறாள்

வாடகை தாய்

                  ~முனைவர் புகழேந்தி


பலமுறை கீழே விழுந்தும்

முயற்சிப்பதை நிறுத்தவில்லை

சிலந்தி

                   ~அனுராஜ்


மரத்தின் கிளை

வெட்டியதும் கீழே விழுகிறது

குஞ்சுகளோடு கூடு

                     ~கவிநிலா மோகன்


மாட்டுத் தொழுவம்

நிரம்பி வழிகிறது

வைக்கோல்

                     ~சீனு செந்தில்


உள்ளே கடவுள்

ஒருமுறைகூட பார்க்கவில்லை

வாசலில் இருக்கும் யாசகர்

             ~மகிழ்நிலாவின் தந்தை


வழிப்பாட்டுத் தளங்கள்

நம்பிக்கையை விதைக்கிறது

கையேந்தும் பிச்சைக்காரன்

                 ~நாகை ஆசைத்தம்பி


திருமண நிகழ்ச்சி

அட்சதை விழுகிறது

புகைப்படகாரருக்கு

                   ~ஜெகன் ஆன்டணி







6 comments:

  1. சிறப்பான கண்ணோட்டமும் விளக்கமும். அருமை. இன்னும் அதிகமான ஹைக்கூ கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா
      நிச்சயம் எழுதுவேன் அய்யா

      Delete
  2. சிறப்பு அருமை அனைத்தும்

    ReplyDelete
  3. தங்களின் நுண்ணிய ஆய்வுப் பார்வை
    மிக உபயோகமான பதிய தகவல் எங்களைப் போன்ற
    புதிய ஹைக்கூவர்களுக்கு.
    தொடர்ந்து சிறப்பான கட்டுரைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. நன்றி நண்பரே
    நிச்சயம் தொடர்கிறேன்

    ReplyDelete