இனிய ஹைக்கூ கவிஞர்களே கடந்த கட்டுரையில் நல்ல ஹைக்கூவை மேலிருந்து கீழாக படித்தாலும் கீழிருந்து மேல் நோக்கி படித்தாலும் பொருள் மாறாமல் இருக்க வேண்டும் அதுவே நல்ல ஹைக்கூ என்பதை பார்த்தோம் அதற்கு நல்ல ஆதரவு இருந்தது இன்று நாம் காணப்போவது ஹைக்கூவில் திருப்பம் பற்றியதுதான்,,,
ஹைக்கூ கவிதை என்றால் மூன்று வரிகளை உடையது என்பதை எல்லோரும் புரிந்துக்கொண்டார்கள் ஆனால் திருப்பம் என்பதை இன்னும் பலர் புரிந்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது நமது கிராமங்களில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்பார்கள் அதுப்போலவே திருப்பம் என்பதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு சம்மந்தமில்லாமல் எழுதுவார்கள் அதற்கு உதாரணம் காட்டமுடியும் ஆனால் அவர்கள் மனசு காயமடையும் என்பதால் அதை தவிர்க்கிறேன்
ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் எழுதும்போது இரண்டு வரிகள் முடிந்து மூன்றாவது வரி எழுதும் போது ஒரு திருப்பம் வைக்க வேண்டும் அது வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் ஆனால் அந்த திருப்பம் அந்த கவிதையோடு சம்மந்தம் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லது முதல் வரிக்கும் கடைசி வரிக்கும் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் அதுவே சிறப்பாக இருக்கும் அப்படி இல்லாமல் நானும் பட்டாளத்துக்கு போகிறேன் என்பதுபோல துளியும் பொருத்தமில்லாத அந்த கவிதையின் பொருளையே மாற்றக்கூடிய திருப்பம் வைப்பது உங்கள் கவிதையை நீங்கள் ரசிக்க சரியாக இருக்கும் அடுத்தவருக்கு உங்கள் திருப்பம் வெறுப்பாகிவிடும் இனிமேல் திருப்பம் வைக்க வேண்டுமானால் அந்த கவிதையின் பொருள் மாறாமல் அதோடு சம்மந்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்துங்கள் கவிஞர்களே
இதோ சில கவிஞர்களின் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் பாருங்கள் பழகுங்கள் எழுதுங்கள்,,,
பயணிகள் கரையேறிவிட்டனர்/
படகோட்டி ஓய்வெடுக்கிறான்/
படித்துறையில் தத்தளிக்கிறது படகு/
திரைப்பட இயக்குனர்
பிருந்தா சாரதி அவர்களின் ஹைக்கூ இந்த கவிதையை பாருங்கள் படகுத்துறையை சுற்றியே வருகிறது இப்படியான திருப்பங்கள் வைத்தால் பொருள் மாறாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,,,
அடுத்து ஒரு கவிதை காண்போம்
மிதித்திடக் கால் கூசுகிறது
மிதியடியில் எழுத்துக்கள்
நல்வரவு
இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர்
ஓவியக்கவி அமுதபாரதி அவர்கள் இந்தக் கவிதையையும் பாருங்கள் வீட்டு வாசலிலே இருக்கிறது திருப்பம் வேண்டுமென்பதற்காக. வேறு எங்கோ போகவில்லை இப்படியான திருபங்களே கவிதையை ரசிக்க வைக்கும் வேறு மாதரி எழுதினால் கவிதையை வெறுக்க வைக்கும் என்பதை உணருங்கள்
அடுத்து ஒரு ஹைக்கூ காண்போம்
வியர்வை மழையில்
நனைகிறது
புழுக்கம்
இந்தக்கவிதையை எழுதியவர் இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியர் ஆரூர் தமிழ் நாடன் அவர்கள் இந்தக்கவிதையும் பாருங்கள் கவிதையோடு சம்மந்தம் உள்ளதாக இருக்கும் வியர்வை புழுக்கம் சம்மந்தம்தானே இப்படியாக கவிதை இருப்பதே நலம் கவிஞர்களே,,,
இன்னும் சில கவிதைகளை காண்போம்
பழுத்த பழத்தின் வாசனை
அதிகம் கல்லடிபடுகிறது
உயர்ந்த மரம்
~ இளைபாரதி கந்தகப்பூக்கள்
மழை நின்றாலும்
சத்தம் நிற்கவில்லை
தவளையின் குரல்
~ஜெயக்குமார் பலராமன்
தொழிற்சாலை புகை
வேகமாய் பரவுகிறது
தொற்று நோய்
~நாகை ஆசைத்தம்பி
பாலைவன தேசம்
வாழ்க்கையை நகர்த்துகிறது
ஒட்டகம் மேய்க்கும் கூலி
~உறையூர் மகேஷ்
கரை ஏறுவதற்காக
கடலில் இறங்குகிறான்
வலை வீசுபவன்
~ தர்மசிங்
என் இனிய கவிஞர்களே இனிமேல் திருப்பங்களை உங்கள் விருப்பத்திற்காக வைக்காதீர்கள் கவிதையோடு சம்மந்தமுள்ளதாக பொருள் மாறாமல் வைத்து நல்ல கவிஞராக வலம்வர வேண்டுகிறேன்,,,
நாகை ஆசைத்தம்பி
சிறப்பு. தொடர்க...
ReplyDeleteநன்றி அய்யா
Deleteசிறப்பு. தொடர்க...
ReplyDeleteநன்றி அய்யா
ReplyDeleteசிறப்பு. நல்வாழ்த்துக்கள் ஆசிரியர் குழாமிற்க்கு.
ReplyDeleteநன்றி சகோ
ReplyDelete