ஹைக்கூ என்றால் என்ன அதை எப்படி எழுதுவது என்பதையும் அதன் வரலாறையும் சுருக்கமாக பார்க்கலாம்
16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் ஹைக்கூ கவிதைகளை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ,பூஸன்,இஷா,ஷிகி ஆகிய கவிஞர்களையே சேரும் அதன்பிறகு முதன்முதலாக ஹைக்கூ கவிதையை தமிழுக்கு அறிமுகம் செய்கிறார் பாரதியார் அதன்பிறகு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழில் அதிகம் எழுதியும் மொழிப்பெயர்த்தும் ஹைக்கூ கவிதைகளை வளர்த்தார் பிறகு கவிக்கோ அப்துல் ரகுமான் ,ஈரோடு தமிழன்பன் மற்றும் மு.முருகேஷ் ஆகியோர் ஹைக்கூ கவிதைகளுக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ் முதல் ஹைக்கூ தொகுப்பு நூல் கிண்ணம் நிறைய ஹைக்கூ நூலாக கருதப்படுகிறது அந்த நூலை தொகுத்தவர் மு.முருகேஷ் அந்த நூலில் என் கவிதையும் உண்டு அதனால் எனக்கும் பெருமையே அவர் அடுத்து தொகுத்த வேரில் பூத்த ஹைக்கூ இந்த நூலிலும் என் கவிதைகள் இருக்கிறது இப்படியாய் என் நீண்ட ஹைக்கூ பயணம் தொடர்கிறது மு.முருகேஷ் அவர்களை தவிர்த்து ஹைக்கூ வரலாறு எழுதமுடியாது இன்னும் அறிவுமதி,அமுதபாரதி,ந.முத்துக்குமார்,கா.ந.கல்யாணசுந்தரம்,இளையபாரதி,அனுராஜ், நாகை ஆசைத்தம்பியாகி நான் போன்றவர்கள் முகநூல் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு உழைக்கின்றோம் பெங்களுருவை சேர்ந்த முனைவர் புகழேந்தி அவர்கள் ஹைக்கூ கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டு ஹைக்கூ கவிதைகளுக்கு சிறப்பு செய்கிறார்
இன்று அக்கவிதையை பல ஆயிரக்கணக்கான கவிஞர்கள் எழுதுகிறார்கள் தமிழில் ஆயிரக்கணக்கான நூல்களும் வந்துவிட்டது ஒரு பெரிய விசயத்தை எளிமையாகவும் வீரியமாகவும் சொல்வதால் எல்லோரும் ஹைக்கூ கவிதைகளை விரும்பி படைக்கின்றார்கள் எனலாம் இனி,,,எப்படி எழுதுவதென்பதை பார்ப்போம்
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும்.2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது இருக்க வேண்டும் ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு
ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின்அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர்வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி சிக்கனமாக தந்தி மொழியைப் போல், எளிமையான குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் அவசியமற்ற இணைப்புச் சொற்களைவிட்டு விட வேண்டும்.
உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காக பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.
ஹைக்கூ வாசிப்பு முறை ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் இரண்டு வரிகளை வாசித்து முடித்து பிறகு முதல் வரியிலிருந்து இரண்டு வரிகளையும் வாசித்து சிறிது நிறுத்தி மூன்றாவது வரியை வாசிக்க வேண்டும் இதுவே கேட்பவர்களுக்கு எதிர்பார்ப்பை உண்டுபன்னும் இது கவியரங்கில் வாசிப்பதற்கு உதவும்
அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத்திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். அந்த திருப்பம் அந்த கவிதையோடு சம்மந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்
இன்றைய அவசர உலகில் ஹைக்கூ கவிதைகளை நேரம் மிச்சம் செய்கிறது நீங்கள் சொல்லவேண்டிய செய்தியை மிக குறுகியக் காலத்தில் மூன்றே வரிகளில் சொல்லி முடித்துவிடலாம் அது உங்களுக்கும் நல்லது வாசிப்பவருக்கும் நல்லது எனவே ஹைக்கூவை நல்லமுறையில் எழுதி நல்ல கவிஞராக வலம் வாருங்கள்
இதோ சில ஹைக்கூ,,,,,
பூசாரி கையில் கட்சி
வெளியேற்றப்பட்டார்
கடவுள்,,,!
~ ஈரோடு தமிழன்பன்
ஒரு வண்டி சென்ரியு
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடி,,,
~ ந.முத்துக்குமார்
ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்
~ ந.முத்து
எடை குறைவாய்,,,ஹைக்கூ நூல்
பக்கத்து வீட்டில் கலர் டீவி
கறுத்துப்போகிறது
என் முகம்
~மு.முருகேஷ்
கிண்ணம் நிறைய ஹைக்கூ
சின்னத்திரை
நம்மை சிறைப்படுத்துகிறது
வீட்டுக் காவலில் தேசம்
~கா.ந.கல்யாணசுந்தரம்
வேரில் பூத்த ஹைக்கூ
அதிக விளைச்சல்
விரைவாகக் கிடைக்கிறது
ஒட்டுச் செடிகள்
~கவிநிலா மோகன்
வாசலில் பிச்சைக்காரர்
உள்ளேயிருந்து குரல்
வீட்டில் ஆளில்லை
~நாகை ஆசைத்தம்பி
எரிதழல் ஹைக்கூ நூல்
கிண்ணம் நிறை ஹைக்கூ
தொடர் மழை
காய்ந்துக் கிடக்கிறது
யாசகனின் வயிறு
~அன்ஸார் எம் எல் எம்
பேருந்து நிற்கவில்லை
இன்னும் காத்திருக்கிறது
சாலையோர நிழற்குடை
~வதிலை பிரபா
கிண்ணம் நிறைய ஹைக்கூ
ஆக்கம் ~நாகை ஆசைத்தம்பி
சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் தங்களது ஹைக்கூ குறித்த கட்டுரை சிறந்த வழிகாட்டி. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteவணக்கம் பல,,,,
ஹைக்கூ பற்றிய கட்டுரை மிகவும் அருமை
ReplyDeleteவாழ்த்துகள். ✍️க.பார்த்திபன்✍️
நன்றி நண்பரே
Deleteஅருமை!இனிமையாக!புரியும்படி
ReplyDeleteஎளிமையாக உள்ளது கவிஞரே!
தொடர்ந்து எழுதுங்கள்!என் போன்றோர்களுக்கு பயன் தருகிறது!
அய்யனே!வாழ்த்துக்கள்!
🙏சாக்கை.பொன்னழகு🙏
மிக்க நன்றி நண்பரே
Delete