ஹைக்கூ கவிதைகள் எழுதி இணையத்தளங்களில் பதிவிடும்போது அதற்கு பொருத்தமான படம் இணைக்கலாமா,,,வேண்டாமா என்பது இங்கே நெடுநாளாக விவதாப்பொருளாக இருக்கிறது அது சம்மந்தமாக என்னுடைய பார்வையை நான் எழுதுகிறேன் இதுதான் விதி என நான் சொல்லவில்லை யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்
சாதாரணமாக ஒரு கவிதைக்கோ அல்லது கவிதை நூலுக்கோ ஓவியம் போடும்போது பென்சில் ஸ்கெச் ஆயில்பெயிண்டிங்க,,, மார்டன் ஆர்ட்
இப்படி பல வகைகளில் செய்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கிறது அந்த படம் போடுவதின் நோக்கமே அந்த புத்தகத்திலுள்ள படைப்புகளோ அல்லது அந்த புத்தகத்தின் தலைப்போ வாசகர்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதற்காகதான் படமே போடாமல் புத்தகம் போட்டால் யாரும் வாங்கமாட்டார்கள் அதுப்போலதான் ஒரு ஹைக்கூ எழுதும்போது அதற்கு பொருத்தமான படம் இணைத்தால் அது வாசகர்களை எளிதில் சென்றடைய வாய்ப்பு அதிகமாகும் முகநூல்களில்கூட படம் இணைக்கும் கவிதையை அதிகமனோர் பார்வையிடுகின்றார்கள் அதற்குக்கூட சிலர் விதாண்டாவாதம் செய்யலாம் அது கவிதைக்காக அல்ல படத்துக்காகன்னு,,அது உண்மையல்ல என்பது என் கருத்து ஏனென்றால் படம் இணைக்கும்போது அது வாசகர்களுக்கு உடனே புரிவதால் அதிகமானோர் பார்வையிடுவதாக நான் நினைக்கிறேன் இன்னும் நாம் அந்தக்காலத்திலே இருந்தால் ஹைக்கூ கவிதைகளை வளர்தெடுக்கமுடியாது
அந்தக்காலத்தில் அம்மியில் அரைத்துதான் குழம்பு வைத்தார்கள் இப்போது குழம்பு பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கிறது இப்போதும் அம்மியில் அரைத்த குழம்பே வேண்டுமென்றால்(பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா,,,) பட்டனியாகதான் இருக்க வேண்டும் முன்பெல்லாம் புலவர்கள் மட்டுமே கவிதை எழுதி வந்தார்கள் அதை உடைத்து தேமாங்கா புளிமாங்கா எதுவும் வேண்டாமென. கவிஞர் மு.மேத்தா அவர்கள் நம்மையெல்லாம் கவியெழுத வைக்கவில்லையா அதுப்போலதான் படம் இணைத்து ஹைக்கூ எழுதுவதால் எளிதாக வாசிப்பவன் புரிந்துக்கொள்ளமுடியும் என்பதே என் கருத்து இக்கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயமல்ல எனக்கு தோன்றியதை நான் சொல்கிறேன்
கவிதைகளுக்கு அது சொல்லும் கருத்துதானே முக்கியம் படம் இணைப்பதெல்லாம் அபத்தம் என்றுக்கூட சொல்கிறார்கள் கருத்து முக்கியம்தான் அதை சொல்லும் விதம் மாற வேண்டும் அல்லவா,,,ஒரு திரைப்படம் பார்க்கிறோம் அதன் கருத்துதானே முக்கியம் என ஆடியோவா பதிவு செய்து வெளியிட்டால் மக்களை சென்றடையுமா,,,அடையாது
அந்த கருத்தும் மக்களை சென்றடைய நடிகர்களை நடிக்க வைத்து வீடியோ செய்யப்படுகிறது அதோடு மட்டுமல்ல அந்த கருத்தை சொல்லக்கூடிய நடிகரும் அதற்கு பொருத்தமானவராக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதுப்போலதான் எந்த படைப்பும் மக்களை சென்றடைய சில யுத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது என் கருத்து அக்கருத்து நமது இலக்கியமான ஹைக்கூ கவிதைகளுக்கும் பொருந்தும் இதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் தூற்றுபவர்கள் தூற்றலாம்,
இதோ சில ஹைக்கூ கவிதைகள் நீங்களும் இரசிக்கலாம்,,,
உயிருக்காக
போராடிக்கொண்டிருக்கிறது
சவப்பெட்டிக்குள் ஈ
~கருமலை பழம் நீ
தானியம் தூவும்
வேடனின் கைகள்
வலை விரிக்கும்
~கா ந.கல்யாணசுந்தரம்
நிலத்தடி நீர்
நிலைத்து நிற்கிறது
குளிர்பான நிறுவனம்
~ரேவதி (ஹைக்கூ தீவு)
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
வாங்கிய கூலி
~சு.கேசவன்
காற்றே மெதுவாய் வீசு
கிளையில்
குருவிக்கூடு
~பா.உதயகண்ணன்
(கிண்ணம் நிறைய ஹைக்கூ)
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
~இரா.இரவி
(வேரில் பூத்த ஹைக்கூ)
உலர்ந்து விட்டது
ஆற்றைக் கடந்ததும்
பறவையின் நிழல்
~முனைவர் புகழேந்தி
(சரம் சரமாய் ஹைக்கூ)
ஊரைக் காக்கும் காளி
கூடவே வருகிறது
பாதுகாப்பு படை,,,!
~சீனு செந்தில்
(ஹைக்கூ 2020)
ஒப்பனைக்காக
விற்பனை செய்யப்படுகிறது
கற்பனைகள்
~நாகை ஆசைத்தம்பி
(எரிதழல்)
காலணிகள் பலரகம்
பேதம் பார்ப்பதில்லை
தாங்கும் நிலம்
~தர்மசிங்
(சரம் சரமாய் ஹைக்கூ)
பக்தனுக்கு பசி
யாசகம் கேட்கிறார்
சாலை ஓவியக் கடவுள்
~விக்டர் ஏஞ்சல்
(சரம் சரமாய் ஹைக்கூ)
உழைக்கும் தொழிலாளி
சுகமாகவே வாழ்கிறார்
பிழைக்கும் முதலாளி
~மாதவன்
(சுகமூட்டிய அந்த நிழல்)
இக்கட்டுரையில் வருவதெல்லாம் என் சொந்தக்கருத்துதான் இதைப்பின்னபற்ற வேண்டுமென கட்டாயமல்ல அது உங்கள் பார்வையைப்பொருத்தது,,,
~நாகை ஆசைத்தம்பி
சிறப்பு தோழர்
ReplyDeleteநன்றி தோழர்
DeleteVery very nice
ReplyDeleteநன்றி நட்பே
Deleteஅருமைங்க அண்ணா!
ReplyDeleteநன்றி நட்பே
Deleteஅருமை தோழர்
ReplyDelete