Monday, April 13, 2020

பூமி

பஞ்ச பூதங்களில்
கொஞ்சம் வித்தியாசமானது~என
நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்
இந்த பூமியை,,,
எத்தனை இயற்கை
இடர்பாடுகள் வந்தாலும்
செயற்கை வன்முறைகள்
வெடித்தாலும்
ஒருபோதும் தன் பணியை
நிறுத்தாமல்
இயங்கிக்கொண்டே இருக்கும்
வல்லமை படைத்தது

இந்த பூமி
மனித குலத்திற்கு மட்டுமல்ல
உலகத்தில் வாழும் ஜீவராசிகள்
அனைத்திற்கும்
தேவையானவற்றை
கொடுத்துக்கொண்டே இருக்கும்
அட்சயப்பாத்திரம்
பூமி ஒரு புரியாத புதிர்
மட்டமல்ல
புதிரா புனிதமா எனக்கூட
சொல்லலாம்
எடுப்பதையும் கொடுப்பதையும்
ஏற்றுக்கொள்ளும்
தாராள பிரபு

தேர் கொடுத்தவன்
போர்வை கொடுத்தவன் எல்லாம்
வள்ளல் எனும்போது
உயிர் ராசிகள் வாழ ~ பல
ஊரை உருவாக்கிக்கொடுத்த
இப்பூமியை
என்னவென்று சொல்வது
அதனால்தான் பூமியை
தாய் என்று சொல்கின்றோம்போல

இந்தபூமி
எல்லோருக்கு சொந்தமானது
இதை
பாதுகாப்பதும் பயன்படுத்துவதும்
நமது கடமை
நாம் இறந்துப்போனால்
ஒரு கண்ணை தானம் செய்யக்கூட
நாம் அனுமதி அளித்திருக்க வேண்டும்
ஆனால்
இயங்கிக்கொண்டிருக்கும்
இவ்வளோ பெரிய பூமியை
அதனிடம் அனுமதி பெறாமலே
பல ஜீவராசிகளுக்கு
சோறு போடும் பூமியை நாம்
கூறுப்போட்டு விற்கின்றோமே
இது நியாயமா,,,?!
இயற்கை காப்போம்
இனிமையாய் வாழ்வோம்

நாகை ஆசைத்தம்பி
கோவை
8754879990

No comments:

Post a Comment