Monday, April 13, 2020

பூமி

பஞ்ச பூதங்களில்
கொஞ்சம் வித்தியாசமானது~என
நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்
இந்த பூமியை,,,
எத்தனை இயற்கை
இடர்பாடுகள் வந்தாலும்
செயற்கை வன்முறைகள்
வெடித்தாலும்
ஒருபோதும் தன் பணியை
நிறுத்தாமல்
இயங்கிக்கொண்டே இருக்கும்
வல்லமை படைத்தது

இந்த பூமி
மனித குலத்திற்கு மட்டுமல்ல
உலகத்தில் வாழும் ஜீவராசிகள்
அனைத்திற்கும்
தேவையானவற்றை
கொடுத்துக்கொண்டே இருக்கும்
அட்சயப்பாத்திரம்
பூமி ஒரு புரியாத புதிர்
மட்டமல்ல
புதிரா புனிதமா எனக்கூட
சொல்லலாம்
எடுப்பதையும் கொடுப்பதையும்
ஏற்றுக்கொள்ளும்
தாராள பிரபு

தேர் கொடுத்தவன்
போர்வை கொடுத்தவன் எல்லாம்
வள்ளல் எனும்போது
உயிர் ராசிகள் வாழ ~ பல
ஊரை உருவாக்கிக்கொடுத்த
இப்பூமியை
என்னவென்று சொல்வது
அதனால்தான் பூமியை
தாய் என்று சொல்கின்றோம்போல

இந்தபூமி
எல்லோருக்கு சொந்தமானது
இதை
பாதுகாப்பதும் பயன்படுத்துவதும்
நமது கடமை
நாம் இறந்துப்போனால்
ஒரு கண்ணை தானம் செய்யக்கூட
நாம் அனுமதி அளித்திருக்க வேண்டும்
ஆனால்
இயங்கிக்கொண்டிருக்கும்
இவ்வளோ பெரிய பூமியை
அதனிடம் அனுமதி பெறாமலே
பல ஜீவராசிகளுக்கு
சோறு போடும் பூமியை நாம்
கூறுப்போட்டு விற்கின்றோமே
இது நியாயமா,,,?!
இயற்கை காப்போம்
இனிமையாய் வாழ்வோம்

நாகை ஆசைத்தம்பி
கோவை
8754879990

Saturday, April 11, 2020

ஊரடங்கு

இயற்கை தன்னை
புதுப்பித்துக்கொள்ள
தொடர்கிறது
ஊரடங்கு,,,!
இந்த உலகம் கடவுளின்
கடைக்கண்பார்வையில்
கட்டமைக்கப்படவில்லை
இயற்கையின் இன்முகத்தில்
இனிதே நடக்கின்றது

வாகனப்புகைகளிலும்
சாராய நெடிகளிலும்
ஊழல் கரங்களிலும்
ஒலி ஒளி அமைப்புகளிலும் சற்றே
ஓய்ந்திருக்க,,,
இயற்கை தன்னை
மெருகேற்றிக்கொள்ள
உருவாக்கப்படுகின்றது
ஊரடங்கு,,,

மனிதன் இல்லாமல்
இயற்கை தன்னை
வளர்த்துக்கொள்ளும்
இயற்கை இல்லாமல்
மனிதன் பிழைக்கமுடியாது
அதனால்
இயற்கை நம்மை
பழிவாங்கவில்லை
வழியமைத்துக்கொள்கிறது
ஊரடங்கில் தன்னை
புதுப்பித்துக்கொள்ள,,,

வழிப்பாட்டுத்தலங்களையே
வழிமூடவைத்து
எனையின்றி
ஏதும் அசையாதுயென
நிருபித்துள்ளது இயற்கை
இயற்கையை புதுப்பிக்கவாவது
இணைந்தே கடைப்பிடிப்போம்
ஊரடங்கை,,,!

~ நாகை ஆசைத்தம்பி
     கோவை