Thursday, January 23, 2020

ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு

காமராஜர்
மதிய உணவு தருகிறேன்
படிக்க வா என்றார்

எம்ஜியார்
சத்துணவு தருகிறேன்
படிக்க வா என்றார்

கலைஞர்
சத்துணவோடு முட்டையும்
இலவச பேருந்து கட்டணமும்
மிதிவண்டியும்கூட தருகிறேன்
படிக்க வா என்றார்

ஜெயலலிதா
அவர் இவ்வளவுதான் கொடுப்பாரா
நான் அதோடு
மடிக்கணினியும்
சேர்த்தே தருகிறேன்
படிக்க வா என்றார்

இவர்களெல்லாம்
ஒருவரோடு ஒருவர்
போட்டிப்போட்டு
கிராமப்புற மாணவர்களுக்கு
கல்வி கொடுத்தார்கள்

இப்போ,,
அஞ்சாம்போடு
ஆப்பு வைக்க
ஆயத்தமாகிட்டாங்க,,,,

பின்ன,,,
படிச்சாதானே
கேள்வி கேட்பான்,,,?!

கவிஞர் நாகை ஆசைத்தம்பி

Tuesday, January 14, 2020

பொங்கல் வாழ்த்துகள்

உழவன்
சேற்றில் கால்வைக்காவிட்டால்
நாம்
சோற்றில் கை வைக்கமுடியாது
அப்புறம்,
பொங்கல் கிடையாது
போகிதான்,,,
உழுபவன் கணக்கு பார்த்தால்
உலக்குகூட மிஞ்சாது
என்பார்கள்,
இந்த பொங்கல் நாளிளாவது
உழவனை
உற்சாகபடுத்துவோம்
இல்லையென்றால்
இன்னொரு சோமாலியா
உருவாகும்,

வாழ்த்துக்கள் தோழர்களே,,,

கவிஞர் நாகை ஆசைத்தம்பி

Thursday, January 9, 2020

ஹைக்கூ 2020 நூல் வெளியீடு

ஹைக்கூ 2020 என்ற நூல் பிப்ரவரி முதல் தேதி சென்னை இக்சா மையத்தில் வெளியிடப்படுகின்றது

Saturday, January 4, 2020

அப்பா

அம்மா
பாசத்தாலும்,
அப்பா
கோபத்தாலும்,
அன்பை காட்டுகின்றனர்,

அம்மாவை
நண்பனாக பாவித்து
அனைத்தையும்
கொட்டித்தீர்க்கிறோம்,

அப்பாவை
கடவுளாக நினைத்து
எப்போதாவது
ஏதாவது ஒரிரு
வார்த்தைகள்
பேசுகிறோம்,

அனாலும்
அப்பாக்கள்
தப்பாக சிந்திப்பதில்லை
மகன்களைப்பற்றி
மணிக்கணக்காய்
யோசிக்கின்றார்கள்,?!

கவிஞர் நாகை ஆசைத்தம்பி