#வேரை_உறிஞ்சும்_நீர் நூல் விமர்சனம் சேரன் முரசு ஆசிரியர் அவர்களுக்கு நன்றிபல,,
நூல் விமர்சனம்
*****-***********
நூலின் பெயர் ;வேரை உறிஞ்சும் நீர்
ஆசிரியர் ;கவிஞர் நாகை ஆசைத்தம்பி
வெளியீடு ;கவிகுடில் வெளியீடு கோவை 8754879990
பக்கம் 148 விலை 225
ஒரு அருமையான நூலை உலகெங்கிலுமுள்ள 35தமிழ் கவிஞர்களை திரட்டி இந்நூலை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர் இந்நூலிலுள்ள கவிதைகளை படிக்கவே வேண்டாம் இந்த தலைப்பே பல விசயங்களை நமக்கு சொல்லிவிடுகின்றது வேருதான் நீரை உறிஞ்சி உயிர்வாழும் என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கு வேரையே நீர் உறிகிறது என்பது எவ்வளவு யோசிக்க வைக்கின்றது இதற்காகவே கவிஞருக்கு பலத்த கைத்தட்டலை கொடுக்கலாம் ஆம் தோழர்களே இந்த நாட்டில் இப்போதைய நிலைமையை தலைப்பே சொல்லிவிடுகின்றது
நூலாசிரியர் நாகை ஆசைத்தம்பியின் கவிதைகள் கடைசிப்பக்கதில் அச்சிலேறியிருந்தாலும் இங்கே முதலில் பதிவு செய்கின்றேன்
வேரை உறிஞ்சுது நீர்
யாரை நாம் குறைச்சொல்ல,,?!
எல்லாம் அவன் செயலென்று
எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறோம்
புரட்சிகள் வெடிக்காதவரை
மலர்ச்சிகள் கிடைக்காது தோழனே
என அற்புதமான கருத்தை முன் வைக்கின்றார்
இத்தொகுப்பில் கவிஞர் கோவை சசிகுமார் அவர்கள் நாளை என்ற தலைப்பிலான கவிதையில்,,,
விதையில்லா பழங்கள்
குளோனிங் ஆடுகள்
பறைவையென அறியா ஆடுகள்
மகர்ந்தமாகாத மலர்கள்
இவற்றையெல்லாம்
நமதாக்கும் பொழுது
நமக்கான சந்ததியும் நாளை,,,?!
என கேள்விக்குறியோடு நாளை சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றார்
பெங்களுருவை சேர்ந்த முனைவர் புகழேந்தி அவர்கள் மகளிர்தினம் சம்மந்தமாக எழுதிய கவிதை மங்கயரை தரம் தாழ்த்தும் சமூகத்தில் நாமும் அங்கத்தினராய் இருக்கும்போது கொண்டாடி என்ன பயன் மகளிர்தினம் என கேள்விக்கணை தொடுக்கின்றார்
இதோ அந்த கவிதை,,,
மந்தை மந்தையாய்
மனிதாபமின்றி கற்பழிக்கப்படுகையிலே மகளிர்தினம்
மணாளன் மாமியார் மாமனாரால்
மகா கேவலமாய் நடத்தப்படுகையிலே
மகளிர்தினம்
சொந்தபந்தங்களால்
கைவிடப்பட்டு சோற்றுக்கே வழியின்றி
அபலையாகி நிற்கையிலே
மகளிர்தினம்
ஆடவருக்கு வேண்டும்போதெல்லாம்
தேகசுகம்தரும்
வெறும் போக வஸ்துகளாகி
பாவிக்கப்படுகையிலே
மகளிர்தினம்
மாடாக உழைப்பதே
எழுதாத சட்டமென
வீடு தோறும் சம்பளமில்லா
பணிப்பெண்ணாய்
வாழ்கையிலே
மகளிர்தினம்
தன்னிலத்தில் தனக்கென
தனியறையின்றி
மானிட பதுமையாய்
மூச்சடக்கி மூலையில் அமர்கையில்
மகளிர்தினம்
மத்திய ராத்திரியில்
அச்சமின்றி நடமாடும்
மகாத்மாவின் கனவு
மங்கலான கனவாகி போனதால்
பெருமூச்சுடன் வாழ்கையிலே
மகளிர்தினம்
மடைத்திறந்த வெள்ளம்போல்
அனைத்து ஆலயங்களிலும்
பிரவேசித்து ஆண்டவனை
வேண்டுவதென்பது
பகல் கனவென்று பாவிக்கையிலே
மகளிர்தினம்
மங்கையரை தரந்தாழ்த்தும்
சமூகத்தில்
அங்கத்தினராய் நாமும் இருக்கையிலே
கொண்டாடி பயனென்ன
மகளிர்தினம்,
இதைப்போல இத்தொகுப்பில் பல கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றது
வாய்ப்புள்ளவர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,
கவிதாயினி ரேவதி
சென்னை 58

வாழ்த்துக்கள் கவியே
ReplyDeleteநன்றிபல
ReplyDelete