Tuesday, December 31, 2019
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வளர்வதும்,,,தேய்வதும்
வாடிக்கை நிலாவிற்கு,,,
உதிப்பதும்,,,மறைவதும்
வாடிக்கை சூரியனுக்கு,,,
அழுவதும்,,,சிரிப்பதும்
வாடிக்கை மழலைக்கு,,,
உயர்வதும்,,,தாழ்வதும்
வாடிக்கை வாழ்விற்கு,,,
ஆனால்
வாடிக்கை இல்லாதது
நாழிகை மட்டுமே
ஆம் தோழர்களே,,,!
காலம் போனால் திரும்பாது
கடந்த ஆண்டில்
இழந்தவை இழந்தவையாகவே
இருக்கட்டும்
இன்று பிறக்கும் ஆண்டு
இனிமையாக அமைய
இயற்கை நமக்கு உதவட்டும்
~ கவிஞர் நாகை ஆசைத்தம்பி
புத்தாண்டு வாழ்த்துக்கள்,,,
வாடிக்கை நிலாவிற்கு,,,
உதிப்பதும்,,,மறைவதும்
வாடிக்கை சூரியனுக்கு,,,
அழுவதும்,,,சிரிப்பதும்
வாடிக்கை மழலைக்கு,,,
உயர்வதும்,,,தாழ்வதும்
வாடிக்கை வாழ்விற்கு,,,
ஆனால்
வாடிக்கை இல்லாதது
நாழிகை மட்டுமே
ஆம் தோழர்களே,,,!
காலம் போனால் திரும்பாது
கடந்த ஆண்டில்
இழந்தவை இழந்தவையாகவே
இருக்கட்டும்
இன்று பிறக்கும் ஆண்டு
இனிமையாக அமைய
இயற்கை நமக்கு உதவட்டும்
~ கவிஞர் நாகை ஆசைத்தம்பி
புத்தாண்டு வாழ்த்துக்கள்,,,
Friday, December 27, 2019
தேர்தல் சின்னம்
ஆட்டோ சின்னத்திற்கு
வாக்கு சேகரிக்க
வேட்பாளர் செல்கிறார்
அம்பாசிட்டர் காரில்,,,!
*****
கம்ப்யூட்டர் காலத்தில்
வாக்கு சீட்டில்
அச்சிடப்படுகிறது
கை உருளை,,,!
*****
வழுக்கத்தலை வேட்பாளர்
வீடு வீடாக
ஓட்டுப்போட சொல்கிறார்
சீப்பு சின்னத்திற்கு,,,!
*****
படுக்க பாய் இல்லாதவன்
தலைவரை தேர்வு செய்ய
வாக்களித்தான்
கட்டில் சின்னத்திற்கு,,,!
~ நாகை ஆசைத்தம்பி
வாக்கு சேகரிக்க
வேட்பாளர் செல்கிறார்
அம்பாசிட்டர் காரில்,,,!
*****
கம்ப்யூட்டர் காலத்தில்
வாக்கு சீட்டில்
அச்சிடப்படுகிறது
கை உருளை,,,!
*****
வழுக்கத்தலை வேட்பாளர்
வீடு வீடாக
ஓட்டுப்போட சொல்கிறார்
சீப்பு சின்னத்திற்கு,,,!
*****
படுக்க பாய் இல்லாதவன்
தலைவரை தேர்வு செய்ய
வாக்களித்தான்
கட்டில் சின்னத்திற்கு,,,!
~ நாகை ஆசைத்தம்பி
Thursday, December 26, 2019
சமூக சிந்தனை கவிதை
தவிக்கும் வாயிக்கு
தண்ணீர் தர மறுத்துவிட்டு
கடிக்கும் பாம்புக்கு
பால் வார்க்க விரைகிறோம்,
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியை
விமர்ச்சனம் செய்துவிட்டு
நம்ம வீட்டில்
மட்டன் பிரியாணியை~ஒரு
கட்டு,கட்டுகிறோம்,
குடி,குடியை கெடுக்குமென
விளம்பரம் செய்துவிட்டு
கடையை திறந்துவைத்து
வியாபாரம் செய்கிறோம்,
படிப்பவனுக்கு
வேலையென்று சொல்லிவிட்டு
பணம் படைத்தவனுக்கே
முன்னுரிமை கொடுக்கிறோம்,
பெண்ணே
பூமியென்று சொல்லிவிட்டு
மண்ணுக்கு கொடுக்கும்
மரியாதையைக்கூட~ ஒரு
பெண்ணுக்கு கொடுக்க
மறுக்கிறோம்,
கையேந்தும் பிச்சைக்காரனுக்கு
சில்லரை இல்லையென
சொல்லிவிட்டு
கோடிகளில் புரளும்
கோவில் உண்டியலில்
கொட்டுகிறோம்,
கோவணம் கட்டிய விவசாயியை
வெயிலில்
காக்க வைத்துவிட்டு
வெள்ளை வேஷ்டி கட்டியவனுக்கு
விருந்து வைத்து
மகிழ்கின்றோம்,
இப்படிபட்டவர்களைதான்
மனிதர்களென சமுகம்
அங்கிகாரம் செய்கிறது
நேர்மையானவர்களை
பிழைக்கத்தெரியாத
பைத்தியக்காரன்~என
ஒதுக்கி வைக்கிறது,,,,,?!!!
~கவிஞர் நாகை ஆசைத்தம்பி
தண்ணீர் தர மறுத்துவிட்டு
கடிக்கும் பாம்புக்கு
பால் வார்க்க விரைகிறோம்,
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியை
விமர்ச்சனம் செய்துவிட்டு
நம்ம வீட்டில்
மட்டன் பிரியாணியை~ஒரு
கட்டு,கட்டுகிறோம்,
குடி,குடியை கெடுக்குமென
விளம்பரம் செய்துவிட்டு
கடையை திறந்துவைத்து
வியாபாரம் செய்கிறோம்,
படிப்பவனுக்கு
வேலையென்று சொல்லிவிட்டு
பணம் படைத்தவனுக்கே
முன்னுரிமை கொடுக்கிறோம்,
பெண்ணே
பூமியென்று சொல்லிவிட்டு
மண்ணுக்கு கொடுக்கும்
மரியாதையைக்கூட~ ஒரு
பெண்ணுக்கு கொடுக்க
மறுக்கிறோம்,
கையேந்தும் பிச்சைக்காரனுக்கு
சில்லரை இல்லையென
சொல்லிவிட்டு
கோடிகளில் புரளும்
கோவில் உண்டியலில்
கொட்டுகிறோம்,
கோவணம் கட்டிய விவசாயியை
வெயிலில்
காக்க வைத்துவிட்டு
வெள்ளை வேஷ்டி கட்டியவனுக்கு
விருந்து வைத்து
மகிழ்கின்றோம்,
இப்படிபட்டவர்களைதான்
மனிதர்களென சமுகம்
அங்கிகாரம் செய்கிறது
நேர்மையானவர்களை
பிழைக்கத்தெரியாத
பைத்தியக்காரன்~என
ஒதுக்கி வைக்கிறது,,,,,?!!!
~கவிஞர் நாகை ஆசைத்தம்பி
Monday, December 23, 2019
பெரியார் நினைவு நாள்
#பெரியார்_நினைவுநாள்
பெரியாருக்குஓர் கடிதம்
*****************""**********
பெரியவரே!
எங்கள் பெரியாரே!
கண்மூடிதனங்களை
மண்மூடிபோகசெய்த
மகானே!
இங்கு இன்னமும்
கையிலிருந்து திருநீறும்
வாயிலிருந்து லிங்கமும்
வந்துக்கொண்டுதான்
இருக்கிறது,
கம்பியூட்டர் காலமென
நாங்கள்
கவலையற்று இருந்தால்
அதையும் சிலர்
அடிமைபடுத்தி
சாதகம் கணிக்கவும்
எடை பார்க்கவும்
பரிதாபமாய்
நிறுத்திவைத்துள்ளனர்,
அய்யா பெரியாரே,!
நீங்கள் மீண்டும்-இங்கு
வரவேண்டும்
மூடநம்பிக்கையை
முற்றிலும் வேரறுக்க,,,!
~கவிஞர் நாகை ஆசைத்தம்பி
பெரியாருக்குஓர் கடிதம்
*****************""**********
பெரியவரே!
எங்கள் பெரியாரே!
கண்மூடிதனங்களை
மண்மூடிபோகசெய்த
மகானே!
இங்கு இன்னமும்
கையிலிருந்து திருநீறும்
வாயிலிருந்து லிங்கமும்
வந்துக்கொண்டுதான்
இருக்கிறது,
கம்பியூட்டர் காலமென
நாங்கள்
கவலையற்று இருந்தால்
அதையும் சிலர்
அடிமைபடுத்தி
சாதகம் கணிக்கவும்
எடை பார்க்கவும்
பரிதாபமாய்
நிறுத்திவைத்துள்ளனர்,
அய்யா பெரியாரே,!
நீங்கள் மீண்டும்-இங்கு
வரவேண்டும்
மூடநம்பிக்கையை
முற்றிலும் வேரறுக்க,,,!
~கவிஞர் நாகை ஆசைத்தம்பி
Saturday, December 21, 2019
என் ஜீவன் உன்னோடு கவிதை நூல்
என் இனிய இலக்கிய தோழர்களே வணக்கம் பல என் ஜீவன் உன்னோடு என்ற இந்த காதல் கவிதை நூல் என்னுடைய ஒன்பதாவது நூலாக வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் அதுவும் இந்நூல் நோஷன் பிரஸ் வெளியீடாக வருகின்றது மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என் கவிதைகளை யாராவது வெளியிடுவார்களா என நான் ஏங்கிக்கிடந்த காலம் போய் இப்போது உலகளவில் என் கவிதைகளை நோஷன் பிரஸ் கொண்டுச்செல்வது பெருமையாக உள்ளது
அன்புத்தோழர்களே இந்த நூலில் நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள் அதிகமாக இருக்கிறது இதை படித்தாலே சிலருக்கு காதல் வரலாம் அதற்கு நான் பொறுப்பல்ல,,, இதற்குமுன்பு வெளிவந்த என் எட்டு நூல்களுக்கும் தந்த ஆதரவை இந்நூலுக்கும் தரும்படி அன்போடு வேண்டுகிறேன்
இந்நூல் வெளிவர உதவி செய்த நோஷன் பிரஸ் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி,,, தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கும்கூட,,,
நன்றியோடு,,,,
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
கோவை
8754879990
ஹைக்கூ கவிதைகள்
அறுந்துப்போன செருப்பு
அழகாய் நடைப்போடுகிறது
செருப்பு தைப்பவன் குடும்பம்,,!
உயர்ந்த கட்டிடங்கள்
உருக்குலைந்து கிடக்கிறது
தொழிலாளி உடல்நலன்,,!
தொழிற்சாலை புகை
வேகமாய் பரவுகிறது
தொற்று நோய்கள்,,,!
பருவமழை நிரம்பி விட்டது
அரசு மருத்துவமனை
நோயாளிகள் எண்ணிக்கை,,!
~ நாகை ஆசைத்தம்பி
கோவை
ஐக்கூ அந்தாதி எப்படி எழுதலாம்
ஐக்கூ அந்தாதி
ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி ஆகும்
என்னுடைய ஐக்கூ அந்தாதி கவிதைகள் ;
சோறு குறைவுதான்
கூட்டத்தை அழைத்தது
காகம்,,,!
காகம் கரைந்தும்
வருவோர் யாருமில்லை
மரத்தடி பிச்சைக்காரன்,,,!
பிச்சைக்காரன் குரல்
காதில் கேட்பதில்லை
பணக்காரன் வீடு,,,!
வீடு காலியானது
அனாதையாய்
ஆணி,,,!
இப்படியாய் சுருக்கமாக சொன்னால் எந்த எழுத்தில் அல்லது வார்த்தைகளில் கவிதை முடிகிறதோ அதை முதல் எழுத்தாக அல்லது வார்த்தையாக வைத்து அடுத்த கவிதையை புனைவதுதான் அந்தாதி எனப்படுகிறது
நான் முடியும் வார்த்தைகளில் இருந்து தொடங்கியிருக்கிறேன் இதற்கு பெயர் ஐக்கூ அந்தாதி எனப்படும்
நீங்களும் முயற்சிக்கலாமே,,,
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
ஹைக்கூ கவிதைகள்
வரி விலக்களியுங்கள்
தரிக்கெட்டோடட்டும்
பரியேறும் பெருமாள்,,,!
ஏறியது விலைவாசி
இறங்கியது
அரைஞான் கயிறு
அர்ச்சகரும்
அயிரமீனும்
நீராடும் ஓரேகுளம்
காக்கை கரைந்தும்
வருவோர் யாருமில்லை
மரத்தடி பிச்சைக்காரன்
குருடர் பார்க்கிறார்
செவிடர் கேட்கிறார்
நவீன மருத்துவம்
ஒளிமயமான எதிர்காலம்
தூரத்தில் தெரிகிறது
சூரிய வெளிச்சம்,,!
~நாகை ஆசைத்தம்பி
கோவை
Friday, December 20, 2019
காதல் கவிதை
காத்துருப்பது
கஷ்டமென்றாலும்~ உனக்காக
காத்திருப்பது
நிறைவாயிருக்கிறது,
கவிஞனாய்~எனக்கு
மிகைப்படுத்தல்
பிடிக்காதென்றாலும்
உன்னை மிகைப்படுத்தல்
உயர்வாய் இருக்கிறது,
முழுப்பாடல்
கேட்டப்பின்னாலும்~உன்
முனுமுனுப்பு கேட்டால்தான்
திருப்தியாய் இருக்கிறது,
ஆடைக்குறைப்புசெய்து
அரைக்குறையாய்
செல்வோர்களில்~ நீ
முழுசாய் போர்த்தி
முக்காடுப்போட்டுச்செல்வதே
அழகாய் இருக்கிறது,
அடா,,,நான்தான்
ஒன்றும் தெரியாத ஜடம்
உனக்குக்கூடவா
தெரியவில்லை~இந்த
உலறல்களுக்கெல்லாம
என்ன காரணமென்று,,,?!
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
குடியுரிமை
குடியுரிமை
கேள்விக்குறியாக்கப்பட்டு
கோரதாண்டவமாடுகின்றது,,,,
வாக்குரிமை கேட்டு
வந்துக்கொண்டிருக்கிறார்கள்
எம் மக்கள்
வார்டு வார்டாக,,,
நாகைஆசைத்தம்பி
கேள்விக்குறியாக்கப்பட்டு
கோரதாண்டவமாடுகின்றது,,,,
வாக்குரிமை கேட்டு
வந்துக்கொண்டிருக்கிறார்கள்
எம் மக்கள்
வார்டு வார்டாக,,,
நாகைஆசைத்தம்பி
Thursday, December 19, 2019
நூல் விமர்சனம்
#வேரை_உறிஞ்சும்_நீர் நூல் விமர்சனம் சேரன் முரசு ஆசிரியர் அவர்களுக்கு நன்றிபல,,
நூல் விமர்சனம்
*****-***********
நூலின் பெயர் ;வேரை உறிஞ்சும் நீர்
ஆசிரியர் ;கவிஞர் நாகை ஆசைத்தம்பி
வெளியீடு ;கவிகுடில் வெளியீடு கோவை 8754879990
பக்கம் 148 விலை 225
ஒரு அருமையான நூலை உலகெங்கிலுமுள்ள 35தமிழ் கவிஞர்களை திரட்டி இந்நூலை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர் இந்நூலிலுள்ள கவிதைகளை படிக்கவே வேண்டாம் இந்த தலைப்பே பல விசயங்களை நமக்கு சொல்லிவிடுகின்றது வேருதான் நீரை உறிஞ்சி உயிர்வாழும் என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கு வேரையே நீர் உறிகிறது என்பது எவ்வளவு யோசிக்க வைக்கின்றது இதற்காகவே கவிஞருக்கு பலத்த கைத்தட்டலை கொடுக்கலாம் ஆம் தோழர்களே இந்த நாட்டில் இப்போதைய நிலைமையை தலைப்பே சொல்லிவிடுகின்றது
நூலாசிரியர் நாகை ஆசைத்தம்பியின் கவிதைகள் கடைசிப்பக்கதில் அச்சிலேறியிருந்தாலும் இங்கே முதலில் பதிவு செய்கின்றேன்
வேரை உறிஞ்சுது நீர்
யாரை நாம் குறைச்சொல்ல,,?!
எல்லாம் அவன் செயலென்று
எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறோம்
புரட்சிகள் வெடிக்காதவரை
மலர்ச்சிகள் கிடைக்காது தோழனே
என அற்புதமான கருத்தை முன் வைக்கின்றார்
இத்தொகுப்பில் கவிஞர் கோவை சசிகுமார் அவர்கள் நாளை என்ற தலைப்பிலான கவிதையில்,,,
விதையில்லா பழங்கள்
குளோனிங் ஆடுகள்
பறைவையென அறியா ஆடுகள்
மகர்ந்தமாகாத மலர்கள்
இவற்றையெல்லாம்
நமதாக்கும் பொழுது
நமக்கான சந்ததியும் நாளை,,,?!
என கேள்விக்குறியோடு நாளை சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றார்
பெங்களுருவை சேர்ந்த முனைவர் புகழேந்தி அவர்கள் மகளிர்தினம் சம்மந்தமாக எழுதிய கவிதை மங்கயரை தரம் தாழ்த்தும் சமூகத்தில் நாமும் அங்கத்தினராய் இருக்கும்போது கொண்டாடி என்ன பயன் மகளிர்தினம் என கேள்விக்கணை தொடுக்கின்றார்
இதோ அந்த கவிதை,,,
மந்தை மந்தையாய்
மனிதாபமின்றி கற்பழிக்கப்படுகையிலே மகளிர்தினம்
மணாளன் மாமியார் மாமனாரால்
மகா கேவலமாய் நடத்தப்படுகையிலே
மகளிர்தினம்
சொந்தபந்தங்களால்
கைவிடப்பட்டு சோற்றுக்கே வழியின்றி
அபலையாகி நிற்கையிலே
மகளிர்தினம்
ஆடவருக்கு வேண்டும்போதெல்லாம்
தேகசுகம்தரும்
வெறும் போக வஸ்துகளாகி
பாவிக்கப்படுகையிலே
மகளிர்தினம்
மாடாக உழைப்பதே
எழுதாத சட்டமென
வீடு தோறும் சம்பளமில்லா
பணிப்பெண்ணாய்
வாழ்கையிலே
மகளிர்தினம்
தன்னிலத்தில் தனக்கென
தனியறையின்றி
மானிட பதுமையாய்
மூச்சடக்கி மூலையில் அமர்கையில்
மகளிர்தினம்
மத்திய ராத்திரியில்
அச்சமின்றி நடமாடும்
மகாத்மாவின் கனவு
மங்கலான கனவாகி போனதால்
பெருமூச்சுடன் வாழ்கையிலே
மகளிர்தினம்
மடைத்திறந்த வெள்ளம்போல்
அனைத்து ஆலயங்களிலும்
பிரவேசித்து ஆண்டவனை
வேண்டுவதென்பது
பகல் கனவென்று பாவிக்கையிலே
மகளிர்தினம்
மங்கையரை தரந்தாழ்த்தும்
சமூகத்தில்
அங்கத்தினராய் நாமும் இருக்கையிலே
கொண்டாடி பயனென்ன
மகளிர்தினம்,
இதைப்போல இத்தொகுப்பில் பல கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றது
வாய்ப்புள்ளவர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,
கவிதாயினி ரேவதி
சென்னை 58
நூல் விமர்சனம்
*****-***********
நூலின் பெயர் ;வேரை உறிஞ்சும் நீர்
ஆசிரியர் ;கவிஞர் நாகை ஆசைத்தம்பி
வெளியீடு ;கவிகுடில் வெளியீடு கோவை 8754879990
பக்கம் 148 விலை 225
ஒரு அருமையான நூலை உலகெங்கிலுமுள்ள 35தமிழ் கவிஞர்களை திரட்டி இந்நூலை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர் இந்நூலிலுள்ள கவிதைகளை படிக்கவே வேண்டாம் இந்த தலைப்பே பல விசயங்களை நமக்கு சொல்லிவிடுகின்றது வேருதான் நீரை உறிஞ்சி உயிர்வாழும் என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கு வேரையே நீர் உறிகிறது என்பது எவ்வளவு யோசிக்க வைக்கின்றது இதற்காகவே கவிஞருக்கு பலத்த கைத்தட்டலை கொடுக்கலாம் ஆம் தோழர்களே இந்த நாட்டில் இப்போதைய நிலைமையை தலைப்பே சொல்லிவிடுகின்றது
நூலாசிரியர் நாகை ஆசைத்தம்பியின் கவிதைகள் கடைசிப்பக்கதில் அச்சிலேறியிருந்தாலும் இங்கே முதலில் பதிவு செய்கின்றேன்
வேரை உறிஞ்சுது நீர்
யாரை நாம் குறைச்சொல்ல,,?!
எல்லாம் அவன் செயலென்று
எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறோம்
புரட்சிகள் வெடிக்காதவரை
மலர்ச்சிகள் கிடைக்காது தோழனே
என அற்புதமான கருத்தை முன் வைக்கின்றார்
இத்தொகுப்பில் கவிஞர் கோவை சசிகுமார் அவர்கள் நாளை என்ற தலைப்பிலான கவிதையில்,,,
விதையில்லா பழங்கள்
குளோனிங் ஆடுகள்
பறைவையென அறியா ஆடுகள்
மகர்ந்தமாகாத மலர்கள்
இவற்றையெல்லாம்
நமதாக்கும் பொழுது
நமக்கான சந்ததியும் நாளை,,,?!
என கேள்விக்குறியோடு நாளை சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றார்
பெங்களுருவை சேர்ந்த முனைவர் புகழேந்தி அவர்கள் மகளிர்தினம் சம்மந்தமாக எழுதிய கவிதை மங்கயரை தரம் தாழ்த்தும் சமூகத்தில் நாமும் அங்கத்தினராய் இருக்கும்போது கொண்டாடி என்ன பயன் மகளிர்தினம் என கேள்விக்கணை தொடுக்கின்றார்
இதோ அந்த கவிதை,,,
மந்தை மந்தையாய்
மனிதாபமின்றி கற்பழிக்கப்படுகையிலே மகளிர்தினம்
மணாளன் மாமியார் மாமனாரால்
மகா கேவலமாய் நடத்தப்படுகையிலே
மகளிர்தினம்
சொந்தபந்தங்களால்
கைவிடப்பட்டு சோற்றுக்கே வழியின்றி
அபலையாகி நிற்கையிலே
மகளிர்தினம்
ஆடவருக்கு வேண்டும்போதெல்லாம்
தேகசுகம்தரும்
வெறும் போக வஸ்துகளாகி
பாவிக்கப்படுகையிலே
மகளிர்தினம்
மாடாக உழைப்பதே
எழுதாத சட்டமென
வீடு தோறும் சம்பளமில்லா
பணிப்பெண்ணாய்
வாழ்கையிலே
மகளிர்தினம்
தன்னிலத்தில் தனக்கென
தனியறையின்றி
மானிட பதுமையாய்
மூச்சடக்கி மூலையில் அமர்கையில்
மகளிர்தினம்
மத்திய ராத்திரியில்
அச்சமின்றி நடமாடும்
மகாத்மாவின் கனவு
மங்கலான கனவாகி போனதால்
பெருமூச்சுடன் வாழ்கையிலே
மகளிர்தினம்
மடைத்திறந்த வெள்ளம்போல்
அனைத்து ஆலயங்களிலும்
பிரவேசித்து ஆண்டவனை
வேண்டுவதென்பது
பகல் கனவென்று பாவிக்கையிலே
மகளிர்தினம்
மங்கையரை தரந்தாழ்த்தும்
சமூகத்தில்
அங்கத்தினராய் நாமும் இருக்கையிலே
கொண்டாடி பயனென்ன
மகளிர்தினம்,
இதைப்போல இத்தொகுப்பில் பல கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றது
வாய்ப்புள்ளவர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,
கவிதாயினி ரேவதி
சென்னை 58
Subscribe to:
Posts (Atom)