Friday, June 30, 2023

கூமுட்ட சிறுகதை நூல்

 என் இனிய தோழர்களே,,, வருகின்ற ஜூலை 7,8,9, ஆகிய மூன்று நாட்கள் *சென்னை* யில்  *உலகத்தமிழ்*  *ஆராய்ச்சி மாநாடு* நடைப்பெறுகிறது அம்மாநாட்டில்  *நாகை ஆசைத்தம்பி* ஆகிய என்னுடைய *கூமுட்ட* என்ற *சிறுகதை நூல்* வெளியிடப்படுகிறது என்பதை தோழர்களின் கவனத்திற்கு தெரிவிக்கிறேன்


Wednesday, July 27, 2022

கூமுட்ட சிறுகதை

 #கூமுட்ட,,, (சிறுகதை)


கிரிச்,,,கிரிச்சினு சத்தம் வந்தாலே சிவப்புச்சட்டை செல்லமுத்து வருவதாக கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் சிலப்பேர் ஓட்டவண்டி தலைவருன்னுக்கூட சொல்வார்கள் அந்த அட்லஸ் சைக்கிள் அவரோட தாத்தா வாங்கியதாம்    அந்தக்காலத்தில் அந்த ஊரில் சைக்கிள் சொந்தம வாங்கி ஓட்டியவர் அவரோட தாத்தா என அவர் பெருமையோடு சொல்வார் சிலப்பேர் இதை மாத்திட்டு வேற வாங்கலாமேன்னு சொன்னா புதுசு வாங்கிடலாம் பழசு கெடைக்குமான்னு வாயை அடைச்சிடுவார் அவரைக்கண்டா சிலப்பசங்க கரக்காட்டக்காரன் படத்தில் வருவதுப்போல ஓட்ட ஒடச ஈயம்பித்தளைக்கு பேரீச்சம்பழமுன்னு சொல்லிட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடுவதுமுண்டு அதைப்பற்றியெல்லாம் அவர் கவலப்படுவதில்லை அவர் இந்த ஒன்றியத்தின் மாதர்சங்க பொருப்பாளராக இருப்பதால் தினமும் ஒரு கிராமத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இப்போ இங்கே வந்திருப்பதுக்கூட மாதர்சங்க செயலாளரை பார்க்கதான் வந்திருக்கிறார்


மாதர்சங்க செயலாளர் மணிமாலா வீட்டு வாசலில் சென்று சைக்கிள் பெல்லை அடித்தார் பெல்லின் சவுண்டை வைத்தே தலைவர்தான் என புரிந்துக்கொண்ட மணிமாலா வாங்க தோழரே என குடிசையிலிருந்து குனிந்து ஓடிவந்தாள்


" என்னம்மா எப்படி போகுது உங்க கிளை   நூறுநாள் வேலைக்கு வரும் தோழர்களை எல்லாம் மாதர் சங்கத்தில் இணைக்கலாமே "


"எங்கங்க தோழர் நானும் சங்கத்தின் சட்டத்திட்டம் சங்கத்தில் சேருவதானால் என்ன நன்மை என்பதெல்லாம் விளக்கிச்சொல்லியாச்சு யாரும் வருகிறமாதரி தெரியல முயற்சி பன்னலாம் தோழர்"


" எல்லாரும் சேர்ந்து குரல்கொடுத்தால்தான் பல விசயங்களை சாதிக்கமுடியும் இந்த நூறுநாள் வேலைக்குக்கூட இன்னும் அதிகமாக சம்பளம் கேட்டு நாம போராடுகிறோம் இன்னும் நம்ம ஸ்டென்த காமிச்சாதானே அரசுக்கு அச்சம் வரும்

 அதுக்கு ஒவ்வொரு கிராமத்திலுள்ள பெண்களும் மாதர்சங்கத்தில் இணையனும்

உங்க முயற்சியை கைவிட வேண்டாம்"


"நிச்சயமாங்க தோழர்,,, தோழர் அப்படி கொஞ்சம் திண்ணையில உட்காருங்க வரகாப்பி வச்சித்தரேன் குடிச்சிட்டே இருங்க நான் இந்த பயல ஸ்கூலுக்கு ரெடி பன்னி விட்டுட்டு வரேன்"


"சரிம்மா,,, காபிதண்ணியெல்லாம் வேண்டாம் நீங்க அவன ரெடி பன்னி விடுங்க நான் அதுக்குள்ள அந்தத்தெருவுக்கு போயி நம்ம தலைவரு ஷகிலாபானு தோழரை பார்த்துட்டு வரேன்"


"ஓ...அதுவும் சரிதான் நீங்க போய்ட்டு வாங்க தோழர்"


மெதுவா அந்த சைக்கிளில் ஏறி அமரந்து மிதிக்கத் தொடங்கினார் ஷகிலாபானு தோழர் வீட்டை நோக்கி,,,


அவருடை சைக்கிள் கிரிச் கிரிச் சத்தம் கேட்டதுமே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து வாங்க தலைவரேன்னு வரவேற்றார் ஷகிலாபானு


" என்னங்க தலைவரே எப்படி இருக்கீங்க,,, டீ,,,கீ,,,குடிக்கிறீங்களா,,,? "


" நல்லா இருக்கேம்மா,,,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கிளை அமைப்பு எப்படி போகுது இங்குள்ள மற்ற பெண்களை எல்லாம் இணைக்க முயற்சி பன்ன சொன்னனே என்னாச்சு"


" அடா,,,நீங்க போங்க தோழரே அவளுக எல்லாம் கூமுட்டங்க நாம எவ்வளவு சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்றாங்க ஆனாலும் தொடர்ந்து பேசிட்டுதான் இருக்கேன் தோழர்"


"அப்படியெல்லாம் மனம் தளரக்கூடாதும்மா என்னோட தாத்தா இந்த சைக்கிளில்தான் வந்து கட்சியைக் கட்டினார் எங்கப்பா இந்த சைக்கிளில்தான் வந்து கட்சியைக் கட்டினார் நானும் இதுலதான் வரேன்,,, எங்க தாத்தா காலத்துல இங்க நம்ம கொடிமரம் மட்டும்தான் இருந்தது எங்கப்பா காலத்தில இரண்டு மூனு கொடிமரம் இருந்தது இப்போ பாரு எந்தக்கட்சின்னு பேரே தெரியல அத்தனை கொடிமரம் இருக்கு அதுக்காக சோர்ந்துப்போகலாமா,,, இது நீங்க செய்ற தோசை இல்ல ஒரு நிமிசத்துல பொரட்டிப்போடுறத்துக்கு இது மாற்றம்   மெல்ல மெல்லதான் வரவைக்கமுடியும் அந்தக்காலத்துல பண்ணையார்கள் அரப்படி நெல்லு அதிகமா கூலி கேட்ட்துக்கு நம்ம மக்களோட குடிசைக்கு தீவைத்து நாப்பத்தி நாலுப்பேரை தீயிக்கு இரையாக்கினார்கள் சாணிப்பால் சவுக்கடிப்பட்டு நம் ம தோழர்கள் இயக்கத்தை கட்டினார்கள் இவ்வளவு ஏன் நாம தோளில் துண்டு போடமுடியாது காலுக்கு செருப்பு போடமுடியாது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக டீ குடிக்க தனிக்குவளை வச்சிருந்தாங்க  இப்போ அப்படியா இருக்கு உங்க மகனும் என் மகனும் பைக்ல பறக்கிறானுங்களே காலேஜுக்கு  இதெல்லாம் யாரால நம்முடைய போராட்டம் நம்ம தோழர்களின் உயிர்தியாகம்,,, மாற்றம் கொஞ்சம் கொஞ்சமதான் வரும்

மாற்றமே வரலன்னு முழு பூசனிக்காயை சோத்துல மறைக்கக்கூடாது இன்னும் வரணும் அதுக்காகதான் நாம போராடுகிறோம்  மனம் சோராமல் இயக்கத்தை வலுப்படுத்தும் வேலையைப் பாருங்க தோழர்"


" நீங்க சொல்றது சரிதான் தோழர் அப்பமாதரியா இப்போ,,, காசு பணம் கட்டிங் கோட்டருன்னு எல்லாரும் அதுக்கு அடிமையாகி வெவ்வேற அமைப்புக்கு போறாங்க யாரு உணர்வுபூர்வமா போறாங்க இப்பவும் சொல்றேன் தோழர் அவங்க எல்லாம் கூமுட்டங்கதான்"


"அப்படி இல்லீங்க பானு தோழர் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாதுன்னு சொல்வாங்க நாம காற்றா இருப்போம்,,, மாற்றம் ஒன்றுதானே மாறாதது"


"நானும் காற்றாதான் இருந்து அசைக்கிறேன் தோழர் அந்த கூமுட்டைங்க பட்டமரமா இருக்குங்களே,,,"


"பானு தோழர் ஒரு கோழி அதிகபட்சமாக இருபது முட்டைகள் இடுமுன்னு வச்சிக்குங்கோ அதுல நாம ஒரு ரெண்டு மூனு முட்டையை சாப்பிட்டு விடுகிறோம் பாக்கி முட்டையை அடை வைக்கிறோம் அதில ஒரிரு முட்டைகள் கூமுட்டையா போய்டும் பாக்கி குஞ்சுப்பொறிக்கும் அதுல காக்கா கொத்தினதுப்போக ஒரு அஞ்சாறு தேறும்ல,,, அதுப்போலதான்   எல்லாரையும் சங்கத்தில் இணைப்போம் நம்ம கொள்கை கோட்பாடுகளை  ஏற்றுக்கொண்டு ஒரு சிலராவது பின் தொடர்வார்களே அதுப்போதுமே  நீங்க சொல்லறமாதரி கூமுட்டைகள் நம்ம செயல்படுகளை பார்த்து தானாக வருவார்கள் விதைக்கிற எல்லா விதைகளும் முளைக்கவா செய்து ஆனா நாம எல்லா விதைகளுக்கும் சேர்த்தேதானே தண்ணீர் பாய்ச்சுகிறோம் இயக்கத்தை கட்டுவதும் விவசாயம்போலதான் தோழர்


"சரிங்க தோழர் அடுத்த வாரம் நீங்க வரும்போது எல்லாருக்கும் சந்தாப்போட்டுகாட்டுறேன் தோழர்"


நம்பிக்கையாய் அடுத்தக் கிராமத்தை நோக்கி சிவப்புத்துண்டு செல்லமுத்து தன் அட்லஸ் சைக்கிளில் அமர்ந்து பயணித்தார்.


நாகை ஆசைத்தம்பி

கோவை

8754879990


Monday, May 30, 2022

கைரதி 377

 



பத்தோட ஒன்னு பதினொன்னு அத்தோட இது ஒன்னு,,,என ஒதுக்கிவிட முடியாத அற்புதமான  தனித்துவமான நூல்தான்
கைரதி377...                                                          விரைவில் வெளிவர இருக்கும் மு.ஆனந்தனின் சிறுகதைத் தொகுப்பு....    
                                                                    இது திருநர் இலக்கியத்தின் புதிய முகம், புதிய பாய்ச்சல்..                                                                                           பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய திருநங்கையர் சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளது.. தமிழில் ஒரே எழுத்தாளர் எழுதிய திருநர் வகைமை சிறுகதைத் தொகுப்பு இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன்..    அந்த வகைமையில் மு.ஆனந்தனின் "கைரதி 377" தான்  முதல் திருநர் சிறுகதைத் தொகுப்பு எனலாம்..  இதில் திருநங்கையர் கதைகள் மட்டுமல்ல இதுவரை அதிகம் எழுதப்படாத திருநம்பிகள் கதை,  வெளிஉலகுக்கு அறிமுகம் இல்லாத, எழுதவேப்படாத இரு பாலுருப்புகள் கொண்ட இடைப்பாலினம் குறித்த கதை சில காலம் ஆணாகவும் சில காலம் பெண்ணாகவும் வாழும் இரு பாலினம் குறித்த கதைகளும் எழுதியுள்ளார்....
ஆகவே இந்த நூலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...    
    
இந்த நூலின் அட்டைப் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

வாழ்த்துகளோடு,,,

நாகை ஆசைத்தம்பி
கோவை
8754879990

Friday, April 8, 2022

ஜப்பான் மொழியில் நாகை ஆசைத்தம்பி ஹைக்கூ கவிதைகள்

 

World Haiku Series 2020 (76) Haiku by Nagai Asaithambi

as got lesser weight
walks with irritation 
ration commodity consumer.

体重が減ったので
イライラしながら歩く
配給商品の消費者

if carrying load reduced
pleasure will be increased 
fish selling woman.

運搬負荷が減少した場合
喜びが増します
魚を売る女性。

bound cow
breaking knot comes running
the stud bull

縛られた牛
結び目を壊す
スタッドブル

sleeping security guard 
creates awareness
the humming mosquito.

眠っている警備員
意識をする
音を立てる蚊に。

with fetal chamber.
comes out in procession 
the almighty.

胎児室付き。
行列で出てくる
全能者。

communal disease
treats by administering 
medicines
Periyar even after demise. 

共同疾患
投与することによって治療する
薬
死後もペリヤール。

in the presence of 
chopper
sprinkles milk itself breathing its last
the cactus.

存在で
チョッパーの
最後の呼吸でミルク自体を振りかける
サボテン。

Rotten food
becomes delicious dish
Orphaned boy.

腐った食べ物
美味しい料理になる
孤児の少年。

Hiding the bitterness,
exhibits hypocrisy 
Neem fruit .

苦味を隠して、
偽善を示す
ニームフルーツ。

Crutch for the Grandma 
Flute for the singer. 
A bamboo tree. 

おばあちゃんのための松葉杖
歌手のためのフルート。
竹の木。

― Translated into Japanese by Hidenori Hiruta
Profile:
My name is Nagai Asaithambi I have been writing haiku for over 30 years and have published three haiku books so far
 1 Erithazhal
 2 Haiku theevu
 3 saram saramay haik

Saturday, March 26, 2022

ஹைக்கூ பழகலாம் வாங்க

 கவிஞர் நாகை ஆசைத்தம்பியின் ஹைக்கூ பழகலாம் வாங்க எனும் ஹைக்கூ கட்டுரைகள் அடங்கிய நூல் விரைவில் வெளிவருகிறது மு. முருகேஷ் அவர்கள் அணிந்துரையுடன்


Saturday, February 26, 2022

மறவனாற்றங்கரையினிலே

 புலவர்.கோவி.புலிகேசி அவர்களின் கவிதைநூல் மறவனாற்றங்கரையினிலே வெற்றிப்பெற வேண்டுகிறேன் இந்நூலில் தங்க.முருகேசன் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார் சண்முககனி அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் நாகை ஆசைத்தம்பி பதிப்புரை வழங்கியுள்ளார் இந்நூல் கோவை மாவட்டம் துடியலூர் தமுஎகசவுக்காக கவிக்குடில் வெளியிடுகிறது