Friday, February 21, 2020

காதல் கவிதை

அன்பால்
ஆக்ரமித்து~என்
அணுக்களில் கலந்து
இரத்த நாளங்களில்
சத்தமின்றி ஓடுகிறாய்
சின்னப்புன்னகையில்
என்னை ஆளுகிறாய்
உன் சோகங்கள்
எதுவானாலும்
எனைத்தாக்காமல்
பார்த்துக்கொண்டு
அன்பை மட்டுமே
அள்ளிக்கொடுக்க
உன்னால் மட்டுமே முடியும்
என் இனிய இலக்கியத்தோழியே,,,!

கவிஞர் நாகை ஆசைத்தம்பி

Sunday, February 2, 2020

நூல் விமர்சனம் : சுகமூட்டிய அந்த நிழல்


நூல் விமர்சனம்
நூலின் பெயர் ; சுகமூட்டிய அந்த நிழல்
ஆசிரியர்           ; உ.மாதவன்
நூலின் வகை   ; ஹைக்கூ
பதிப்பகம்          ;காதிதப்பூ பதிப்பகம்
                              சிவகாசி (7845130010)
கடந்த பிப்ரவரி முதல் நாள் சென்னையில் ஒரு ஹைக்கூ நூல் வெளியீடு செய்தார்கள் அந்த நூலுக்கு நான் வாழ்த்துரை எழுதியிருந்தேன் என்னையும் அழைத்திருந்தார்கள் அந்த விழாவில் என் நண்பரும் பள்ளி ஆசிரியருமான மாதவன் என்பவரின் சுகமூட்டிய அந்த நிழல் என்ற நூலும் வெளியிடப்பட்டது அந்த நூலைப்பற்றி எனது பார்வை,,,
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ? என்று கேட்ட போது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு
புத்தகங்கள் காலத்தின் கண்ணாடி அதை காலங்காலமாக போற்றி பாதுக்காப்பது நமது கடமை,,,    அன்று அசோகர் மரம் நட்டார் என்பதை இன்று நாம் தெரிந்துக்கொள்ள உதவியதே ஒரு புத்தகம்தானே,,,அதை உணர்ந்து தன்னுடைய படைப்புகளும் தனக்கு பிறகும் பேசப்பட வேண்டும் என்பதை உணர்ந்து ஒரு அழகான கவிதைநூலை தந்திருக்கிறார் மாதவன்
அவர் எனக்கு முகநூலில்தான் பழக்கம் என்றாலும் திறமையானவர்களை நம்முடன் வைத்திருந்தால் நாமும் வளரலாம்தானே,,  இந்த நூலில் பல கவிதைகள் கவிதையே அல்ல என தோன்றியது,,,அப்படின்னா,,,நீங்க யோசிப்பது தெரிகிறது அவை அனைத்தும் அவரின் வாழ்க்கை அனுபவங்கள் கண்ணால் கண்டதை இதயத்தால் உணர்ந்து கையால் எழுதி அல்லது அலைபேசியில் டைப் செய்து வைத்துள்ளார் இந்த நூலுக்கு ஜாம்பவான்கள் கல்யாணசுந்தரம் அய்யா முனைவர் புகழேந்தி இவர்களின் மதிப்பீட்டோடு எம் மண்ணின் பொன்னெழுத்தாளர் ஆரூரார் வாழ்த்துரையும் மேலும் மகுடம் சூட்டுகிறது
எனக்கு எப்போதுமே சமூக சிந்தனை கவிதைகள் பிடிக்கும் அந்த வகையில் நூலை திறந்தவுடன் பளிச்சென மின்னியது இந்த ஹைக்கூ,,,
சமத்துவப் பொங்கல்
இன்னும் இருக்கின்றன
சாதிய அடக்குமுறைகள்,,,!
மறுக்கமுடியாத தவிர்க்கமுடியாத உண்மை மட்டுமல்ல இங்கே தீர்க்கமுடியாத பிரச்சனையும் கூட,,, வாழ்த்துக்கள் நண்பரே,,,
உழைக்கும் தொழிலாளி
சுகமாகவே வாழ்கிறார்
பிழைக்கும் முதலாளி,,,
இந்த அற்புதமான ஹைக்கூவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்டேன்
அடுத்து ஒரு கவிதையில் முதியவர்களுக்காக வருந்துகிறார் மாதவன்
கைப்பிடிச் சோறு
பசித் தீர்க்க வழியில்லை
அல்லாடும் முதியவர்கள்,,
இன்றைய உண்மை நிலையும் கூட எத்தனையோ முதியவர்கள் அனாதை விடுதிக்கூட இல்லாமல் அல்லாடுவதை பார்க்கதான் முடிகிறது இப்படி நிறைய கவிதைகள் வாசிக்க. வாசிக்க நூலை மட்டுமல்ல மாதவனையும் நேசிக்க வைக்கிறது நான் இதுவரை வாசிக்காத
புத்தகத்தை வாங்கி வருபவனே என் சிறந்த நண்பன் என்றாராம் ஆப்ராகம் லிங்கன் அவர் இருந்திருந்தால் இந்த நூலை அவரிடம் கொடுத்து ஆசிப்பெறலாம் ஆனாலும் மாதவன் சொல்வதுப்போல,,,
அலமாரி நிறைய புத்தகங்கள்
திறந்து பார்க்க நேரமில்லை
கையில் அலைபேசி
இந்த கவிதையைப்போல லிங்கனுக்கும் நேரம் கிடைத்திருக்காதுதான்
புத்தகத்தில் கவிதை ரீதியாக பெரும் குறை இல்லையென்றாகும் நூலைப்பற்றிய விவரம் எதுவுமே இல்லாதது நெருடல்,,,விலை பக்கம்
உரிமை வெளியீடு இதுப்போன்றவை இல்லாதது குறையே மாதவன் அடுத்த நூலில் சரிசெய்வார் ஆம் இது அவருக்கு முதல் நூல்தானே வாய்ப்புள்ள நண்பர்கள் வாங்கி வாசிக்கலாமே,,,
நூல் விமர்சனம் நாகை ஆசைத்தம்பி